வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் உள்ள சில ஆச்சரியமான உண்மைகள்…

சாக்லேட்டுகளில் dark சாக்லேட், white சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. இதுவரை டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்போம். ஆனால் வெள்ளை நிற சாக்லேட்டுகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியுமா?

வெள்ளை நிற சாக்லேட்டை அதிகம் சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவாக சாப்பிட்டால் தான் நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான். இங்கு வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

கால்சியம் அதிகம்:
வெள்ளை சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார் 169 மிகி கால்சியம் இருக்கும். கால்சியமானது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு அவசியமானது. அதோடு கால்சியம் இதயம், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கும் ஆதரவாக இருக்கும்.

இரத்த அழுத்த பிரச்சினை:
வெள்ளை சாக்லேட்டுகளில் பல உட்பொருட்கள் உள்ளன. குறிப்பாக இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான லினோலியிக் அமிலம் உள்ளது. லினோலியிக் அமிலம் இதயத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவும். அதாவது இரத்தத்தை சீராக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அழுத்துவதோடு, இதயத் துடிப்பை நிலையாக வைத்துக் கொள்ளும்.

கொலஸ்ட்ரால்:
வெள்ளை சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். மேலும் வெள்ளை சாக்லேட் உணவுகளில் உள்ள விட்டமின்களை உறிஞ்ச உதவும். வெள்ளை சாக்லேட்டுகள் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் செய்யும்.

மார்பக புற்றுநோய்:
ஆய்வு ஒன்றில் வெள்ளை சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு வெள்ளை சாக்லேட்டில் உள்ள பாலிபீனால்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

தூக்க பிரச்சினை:
ஒவ்வொருவருக்கும் தூக்கம் மிகவும் அவசியமானது. ஒருவருக்கு போதிய தூக்கம் கிடைக்காவிட்டால், மன அழுத்தமும், எரிச்சல் தன்மையும் அதிகரிக்கும். வெள்ளை சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால், அதில் உள்ள டோபமைன், மயக்க உணர்வை உண்டாக்கி, மூளையை அமைதியடையச் செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறச் செய்யும்.