கொழும்பு நகரில் ஏற்படும் வெள்ள நீரை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, சைனா பெற்றோலியம் பைப்லைன்ஸ் தனியார் நிறுவனத்துடன் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று(30) கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
170 மீற்றர் நீளம் கொண்ட முதலாவது சுரங்கப்பாதை கொழும்பு புதிய முத்துவெல்ல பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கிறது.
இரண்டாவது சுரங்கப் பாதை கொழும்பு 07 ரொரிங்டன் பிரதேசத்தில் 1.2 கிலோமீற்றர் நீளம் கொண்ட சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
நிர்மாணப் பணிகளை 2020ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்வது இலக்காகும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.