வெவ்வேறான உபாயங்களூடாக சமூக வலைதளங்கள் பாவிப்போர் கண்காணிக்கப்படுவர்..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள நிலையில், சிலர் பல்வேறு முறைமைகளினூடாகவும் குறித்த சமூக வலைதளங்களுக்கு உட்பிரவேசிப்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறான உபாயத்தினை கையாண்டாலும் குறித்த நபர்கள் இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளதாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்னும், மூன்று நாட்களில் குறித்த தடைகள் வழமைக்கி திரும்ப அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

####