வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நட்சத்திரம் அம்புரோஸ் திடீர் நீக்கம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பந்து வீச்சு ஆலோசகர் அம்புரோஸ் திடீரென நீக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதிலாக புதிய ஆலோசகராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரா் ரோடரிக் எஸ்ட்விக் நியமிக்கப்பட்டுள்ளார்.

52 வயதான வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அம்புரோஸ், கடந்த மூன்று ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில் நடந்த 20 ஒவர் உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பை வென்றது. இருப்பினும்,பந்து வீச்சு ஆலேசாகர் பொறுப்பில் இருந்து திடீரென அம்புரோஸ் நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான, காரணத்தை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு இதுவரை தெரிவிக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரின் போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரோடரிக் எஸ்ட்விக், அணியில் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.