வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு விசேட வரத்துடன் 2017 IPL போட்டிக்கு…

2017ம் ஆண்டில் நடைபெறவுள்ள இந்திய பிரீமியர் லீக் இற்காக வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், போட்டியில் இணையும் அணிகள் அனைத்தும் சிறந்த வீரர்களை ஏலத்தில் விடாது அணியுடன் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வீரர்கள் பட்டியலினை ஐபிஎல் இணையத்தளம் பிரசுரித்துள்ளதோடு, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை ஏலத்தில் விடாது அணியுடன் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி மாலிங்கவிற்கு கிடைக்கபெறும் தொகையானது இந்திய ரூபாவில் 7.5 கோடி ஆகும் (ரூ. 16.425 கோடி).

அத்துடன் ரயிசின் பூனே அணியில் ஆடும் திசர பெரேரா ஏலத்தில் விடப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.