இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் முன் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியின் கல்கமுவ பிரதேசத்தில் அவரது வீடு அமைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.