எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் இன்றும், எதிர்வரும் 13ம் திகதியும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.
மாவட்ட தேர்தல் செயலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
பிரதான அரசியல் கட்சிகளினது வேட்பாளர்கள் வேட்பு மனுக்களில் கையொப்பமிடும் நடவடிக்கையை நேற்று முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை நண்பகலுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் பூர்த்தியாகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று மஹாவலி கேந்திர நிலையத்தில் வேட்பு மனுக்களில் வேட்பாளர்களின் கையொப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை நேற்று ஆரம்பித்தது.
ஐக்கிய தேசியக் கட்சி, கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் வேட்பு மனுக்களில் வேட்பாளர்களின் கையொப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை நேற்று ஆரம்பித்தது.
ஜே.வி.பி கட்சி கடந்த 6ம் திகதி முதல் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டு வருகின்றனர்.
(riz)