சம்பளம் அதிகரிப்பு – இன்று முதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்…

பெருந்தோட்ட தொழிலாளர்களது அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று(04) முதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களது வேதனம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் அவை தோல்வியடைந்தமையால் இன்று முதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.