ரயில் என்ஜின் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கப் பிரதிநிதி இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்..
உரிய நியமன விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ரயில் என்ஜின் சாரதி உதவியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டமை மற்றும் ரயில் என்ஜின்களில் காணப்படும் சில இயந்திரக் கோளாறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படாமை ஆகிய காரணங்களுக்காக இந்த தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நில அளவைத் திணைக்களத்தின் ஊழியர்களது ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வயிற்றில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பேராதனை வைத்தியசாலைக்குச் சென்ற 21 வயதுடைய யுவதிக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்ட நிலையில்…
ஹிக்கடுவை, தொடகமுவ பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்டுள்ள மீனவர்கள் 07பேருடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்று சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயுள்ளதாக குறித்த கப்பலின் உரிமையாளரான…