வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பேரூந்து பயணிகள் சங்கம் எதிர்ப்பு…

இன்று(16) நள்ளிரவு முதல் தனியார் பேரூந்து உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கொழும்பு மாவட்ட பேரூந்து பயணிகள் சங்கம், அறிக்கை ஒன்றை வௌியிட்டு எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 6.56% பேரூந்து கட்டண அதிகரிப்பை தமது சங்கம் ஏற்றுக் கொள்வதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்கள் கூறுவது போல் நூற்றுக்கு 10% ஆல் அல்லது 20% ஆல் பேரூந்து கட்டணத்தை அதிகரிப்பதை தமது சங்கம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிப்பது ஒருபோதும் நியாயமானதல்ல என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அவர்கள் கோருவது போன்று கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் குறித்த அந்த சங்கம் அரசினை எச்சரித்துள்ளது.