வைத்தியர்களது பணிப்புறக்கணிப்பும் பயங்கரவாத நடவடிக்கைக்கு கீழ்… புதிய சட்டம் இதோ..

(FASTNEWS | COLOMBO) – எதிர்கால அரசாங்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டமொன்றினை கொண்டுவர எண்ணியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

நேற்று(26) எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மேற்கண்டவாறு குறித்த கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்ததாக எதிர்கட்சித் தலைவர் அலுவலக ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜீ.எல்.பீரிஸ்;

குறித்த பயங்கவாத திருத்தச் சட்டமானது மிகவும் பயங்கரமானது எனவும், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து சிவில் சமூக சங்கங்கள் ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படும் (பணிப்புறக்கணிப்புக்கள்) ஜனநாயக விரோத செயற்பாடுகளை மிதிக்கும் வகையில் குறித்த சட்டம் அமையப் பெறவுள்ளது. மேலும் குறித்த சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இரகசிய விடயங்களை மற்றுமொருவருக்கு வழங்குவதும் பயங்கரவாதமாகும். ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் விசாரணை தொனியுடைய நிகழ்ச்சிகளும் பயங்கரவாதம் என பொருள்படும் என அவர் குறித்திருந்தார். ஆராயப்பட்டு மக்களுக்கு ஊடகங்களூடாக தெளிவூட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.