அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இன்று(30) காலை 8 மணி முதல் ஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செவிசாய்க்காததன் காரணத்தினாலேயே இன்று போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித் அளுத்கே குறிப்பிட்டார்.
#rishma..