வைரஸ் காய்ச்சல் காரணமாக தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை…

தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் நோய் காரணமாக காலி மாவட்ட கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளை இன்றும்(22) நாளையும்(23) மூடுவதற்கு தென்மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

காலி, மாத்தறை, முலட்டியன, அக்குரஸ்ஸ, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வலய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இவ்வாறு மூடப்படுகிறது.

அதேபோல் இந்த வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளும் இந்த வாரம் மூடப்படும். பிள்ளைகளின் உயிர்களைக் கருத்திக் கொண்டு பெற்றோரின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தென்மாகாண கல்வி அமைச்சர் சந்திமா ராசபுத்ர தெரிவித்துள்ளார்.