வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு

(FASTNEWS|COLOMBO) –  வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் இலங்கை மருத்துவ சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற 16 மாணவ மாணவிகள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.