இன்று(28) சிசெல்ஸ் மற்றும் மும்பாய் நோக்கி பயணிக்கவிருந்த 4 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், மும்பைக்கு செல்லும் பயணிகள் வேறு விமானங்களின் ஊடாக பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானப் பயணங்களில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.