ஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகலவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட ரஞ்சித் பெர்னாண்டோ ராஜினாமா செய்ததை தொடர்ந்து நேற்றைய தினம் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நியமனத்தை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.