ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(01) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசியல்நிலை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர கட்சியில் புதிய உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.