ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் அசாத் சாலி, கொழும்பு – புறக்கோட்டை பிரதேசத்தில் தேர்தல் இலஞ்சமாக பொருட்களை பகிர்ந்தளித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பழைய சோனக தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இந்த பொருட்களை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான தகவலை அறிந்து கொண்ட பொலிஸார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
டேம் வீதி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒருவரான அசாத் சாலிக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அசாத் சாலி இலஞ்சம் கொடுத்து சிக்கிய விடயம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்..
குறித்த வீடியோ…
#g-reeshma