ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனையிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான அரச காணிகளை தனது நெருக்கமானவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது