ஷரிஆ சட்டம் தொடர்பாகப் கதைக்க வேண்டுமாயின் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுமாறு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்;
எதிர்வரும் தினங்களில் ஷரிஆ சட்டம் தொடர்பில் போராட்டம் ஒன்றைக் தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இதற்கு எதிராக நாட்டில் உள்ள சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம்கள் ஷரிஆச் சட்டம் தொடர்பாகப் பேசவேண்டுமானால் சவூதி அரேபியாவுக்குச் செல்லுங்கள். ஷரிஆச் சட்டம் பற்றிப் இங்கு பேசவேண்டாம் என கூறியுள்ளார்.
இதேவேளை, இந்நாட்டில் பைத்திய சட்டம் உள்ளது போல தெரிகின்றது. பொலிஸார் வடக்கில் அடிவாங்குகின்றனர். ஆனால் சிங்கள இளைஞர்களிடம் சட்டம் பேசுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.