நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமையை அரசு பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொதுபலசேனா அமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மகஜரொன்றினைக் கையளித்தனர்.
குறித்த மகஜர் பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேயினால் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரு வாரங்களில் அறிக்கை ஒன்றினை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி செயலகம் பிரதமரின் கீழ் இயங்கும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரத்துறை அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
(riz)
