(FASTNEWS|COLOMBO) – புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்த, நோர்வே. மற்றும் சுவிஸலாந்து தூதரகங்களும், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷவேந்திர சில்வாவிற்கு இராணுவத் தளபதியாகப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமையின் மூலம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்றன தொடர்பில் 2019 மார்ச் மாதம், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை வழங்கியிருந்த கடமைப்பாடு தொர்பில் தற்போது சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அத்துடன், தேசிய ஒருமைப்பாடு தொடர்பில் இலங்ககை வெளிப்படுத்தும் முயற்சிகளை குறைத்து வெளிப்படுத்துவதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கு கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.