(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமார எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபேசேகர சாந்த சிசிர குமார கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.