ஷிரந்திக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 06/01/2015 நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிப்பு.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கையில் ”நல்லாட்சி எனும் பெயரில் எனது குடும்பம் பழிவாங்கப்படுவதாகவும் தனது தாய்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் நானும் தந்தையுமே அரசியலில் உள்ளதாகவும்; தாயையும், சகோதரர்களையும் இப்பழிவாங்களில் இணைக்க வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.