ஷிரந்தி ராஜபக்ஷவின் நடத்தை குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனை..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கபடுகின்றது.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பிலேயே ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளார்.

தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அலரி மாளிகையிலிருந்து 41 தொலைபேசி அழைப்புகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என குற்றப்புலனாய்வு பிரிவினர் இனங்கண்டுள்ளனர்.

குறித்த தொலைபேசி அழைப்புகள் ஷிரந்தியின் தனிப்பட்ட இலக்கத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே ஷிரந்தி ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவார் என உள்நாட்டு ஊடகம் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது.

தாஜூடீனின் மரணம் நடந்த தினத்தில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் நடந்து கொண்ட விதம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் கடும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாஜூடீன் கொலை சம்பவம் நடைபெற்ற போது ஷிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும், ஷரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவது தொடர்பாக தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி மர்ம முறையில் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)