இலஞ்ச ஊழல் வழக்குகளில் இருந்து ஷிராணி விடுதலை

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த மூன்று வழக்குகளிலிருந்து அவர் விடுதலையாகியுள்ளார்.

தனது சொத்து விபரங்களை 3 வருடங்கலாக சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை  என அவரக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழங்குகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது   அவர்  சார்பில் ஆரஜான சட்டத்தரணி இந்த  வழக்குகள் அரசியல் ரீதியில் தொடரபட்டது என வாதிட்டார். இந் நிலையில்  கொழும்பு நீதிபதி இலஞ்ச ஆணைக்குழு சார்பாக ஆரஜான சட்டத்தரணியை பார்த்து தொடர்ந்தும் வழக்கை கொண்டு நடத்த விரும்புகிரிர்களா என கேட்டார் அதற்கு பதில் அளித்த  இலஞ்ச ஆணைக்குழுவின் திலக் ரத்நாயக வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என கூறினார் .அதனை தொடர்ந்து நீதவான் 3 வழக்குகளிலும் இருந்து விடுதலை செய்தார் .அத்துடன் அவர் மீது விடுக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையும் நீக்கப்பட்டது .   \