ஸசித் பத்திரனவுக்கு இங்கிலாந்து அழைப்பு..

(FASTNEWS | COLOMBO) – இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஸசித் பத்திரன இங்கிலாந்தின் பெர்னஸ் கிரிக்கெட் க்ளப் உடன் உடன்படிக்கை ஒன்றினை கைச்சாத்திட்டுள்ளார்.

2019 போட்டிகளின் பயிற்சியாளராக மற்றும் வெளிநாட்டு விளையாட்டு வீரராக இணைவதாக குறித்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ளதாக விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அணி சார்பில் ஸசித் ஒருநாள் சர்வதேச போட்டிகள் 18 மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் 05 விளையாடியுள்ளார்.