ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் TID இனால் கைது

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார். 

20 வயதுடைய தாஜுதீன் அஹமட் என்ற நபரே மகரகம பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.