‘Standard Credit Finance Limited’ எனப்படும் நிதி நிறுவனத்தின் உரிமப் பத்திரத்தினை நேற்று(25) இலங்கை மத்திய வங்கியானது இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனம் இலாப நோக்குடைய உரிமம் பெற்ற நிதி நிறுவனமாக செயலாற்றி வந்திருந்தது.
எனினும், 2008 முதல் குறித்த நிறுவனம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக வைப்பாளர்களது வைப்புகளை மீளவும் வழங்க முடியாது போயிருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறித்த இருவனத்தின் உரிமப் பத்திரம் மட்டுமின்றி குத்தகை நிதி தொடர்பிலான அனுமதி உள்ளிட்டவையும் இரத்து செய்துள்ளதாக இலங்கை மத்தய வங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
R.Rishma