ஸ்டீவ் ஸ்மித்தை திட்டிய விராட் கோஹ்லி (VIDEO)

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை விராட் கோஹ்லி கடுமையாக திட்டி வழியனுப்பியது அடிலெய்டு மைதானத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அடிலெய்டில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ரெய்னா, கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எடுத்தது.

இதன் பின்னர் 189 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியா 8.5வது ஓவரில் 2 விக்கெட்டுக்கு 89 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அந்த ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா வீசினார். அதை ஸ்மித் அடிக்க முயன்ற போது எக்ஸ்டிரா கவரில் நின்று கொண்டிருந்த கோஹ்லி அதை அசத்தலாக பிடியெடுத்தார்.

உடனே கோஹ்லி ஸ்மித்தை நோக்கி கைசெய்கை செய்து அவரை திட்ட ஆரம்பித்தார். டோனியிடம் எதையோ கூறி திட்டிக் கொண்டிருந்தார். இதனால் மைதானத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

முன்னதாக இந்தியா துடுப்பெடுத்தாடும் போது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கோஹ்லியை அவுஸ்திரேலிய வீரர்கள் தகாத வார்த்தையால் சீண்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் கோஹ்லி அந்த கோபத்தை 90 ஓட்டங்களாக விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=P5fDswI4xLQ” width=”560″ height=”315″]