ஸ்டெய்ன் பந்தில் ஸ்டம்பு முறிந்து பறந்தது (VIDEO)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.

இதில் தென்ஆப்பிரிக்கா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. அம்லா 124 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் 284 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்காவின் புயல்வேக பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் 48-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்தின் மெக்கிளெனகன் சந்தித்தார்.

ஸ்டெய்ன் அந்த பந்தை யார்க்கராக வீசினார். பந்து பேட்டில் படாமல் ஆப் ஸ்டம்பை தாக்கியது. பந்து பட்ட வேகத்தில் ஸ்டம்பு இரண்டாக உடைந்து பல்டி அடித்து சில மீட்டர் தூரம் பறந்து சென்று விழுந்தது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=m0HP44awUtw” width=”560″ height=”315″]

(riz)