அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டெவிட் வொர்னர், கெமரொன் பென்க்ரொப்ட் ஆகியோர் மீள தென்னாபிரிக்காவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 03வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய, குற்றச்சாட்டிலேயே அவர்கள் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக தென்னாபிரிக்கா அணிக்கெதிரான அடுத்த போட்டியில் மாட் ரென்ஷவ் (Matt Renshaw), க்லேன் மெக்ஸ் வெல் ( Glenn Maxwell), ஜோ பர்ன்ஸ் (Joe Burns) ஆகியோர் அவுஸ்திரேலியா அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
-Rishma