பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தென்னாபிரிக்கா விமான நிலையத்தினூடாக மீண்டும் அவரது சொந்த நாட்டிற்கு திரும்பும் போது, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இது குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் வோன் விமர்சித்துள்ளார்.
அதன்படி, ஸ்மித் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தினை நோக்கி வருகின்ற புகைப்படத்துடன் வோன் அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவிட்டு, ” வெட்கமடைகிறேன், ஸ்மித் கொலையாளி அல்ல” என தெரிவித்துள்ளார்.
வோன் இனது ட்விட்டர் பதிவுடன், ஸ்மித் அழைத்துச் செல்லப்படுவதை காட்டும் காணொளி கீழே;
