ஆட்டத்தின் போது மோதல் இல்லாமல் ஸ்மீத் மற்றும் கொஹ்லியால் விளையாட முடியாது என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வீன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மெல்போர்னில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு அஸ்வின் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்தத் தொடர் பேட்ஸ்மேன்களின் தொடர் என்றே நான் கருதுகிறேன்.
எனவே பவுலிங்கில் அடிப்படை நேர்த்தியில் கவனம் செலுத்துவதும், சரியான இடங்களில் பந்து வீசுவதும் அவசியம்.
ஆஸ்திரேலிய வீரர்கள் எனது பந்துகளை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள உரிமை பெற்றவர்கள் என்றால் எனக்கு அவர்களை வீழ்த்தும் உரிமை உள்ளது.
ஏதோ அவர்களின் ஆஃப் ஸ்பின்னர் மட்டும் சிறப்பாக பந்து வீசினர் என்று கூறமுடியாது. அவர்கள் ஆஃப் ஸ்பின்னரும் 80 ரன்களை விட்டுக் கொடுக்கவே செய்தார்.
எனவே ஆஃப்-ஸ்பின்னர் மட்டுமல்ல, அனைவருமே ரன்களை விட்டுக் கொடுத்தோம் ஏதோ ஒரு பவுலரை மட்டும் குறிவைப்பது தவறு.
70 ரன்கள் 60 ரன்கள் என்று விட்டுக்கொடுத்ததால் தான் அடுத்த ஆட்டங்களில் நான் உட்கார வேண்டி வந்தது.
இது நியாயமானதுதான் ஏனெனில் அணிச்சேர்க்கை வெற்றி பெறும் சேர்க்கையாக இருக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
மேலும் ஸ்மித் மற்றும் கொஹ்லி இடையே வருவது அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்றே கருதுகிறேன்.
இருவருமே சவாலை சந்திப்பவர்கள். எனவே அவர்களுக்கு தாங்கள் செய்வது என்னவென்பது நன்றாகத் தெரியும்.
மோதல் இல்லாமல் அவர்கள் இருக்க மாட்டார்கள். களத்தில் இப்படிப்பட்ட சவால்கள் இருப்பது ஆர்வமூட்டக் கூடியதாக உள்ளது.
இது ஆட்டத்தை விறுவிறுப்பாக்குகிறது, எனவே இதனை சீரியசாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.