ஸ்மித் மற்றும் வார்னருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டுத் தடை, தலைமைக்கு ஈராண்டுத் தடை…

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு வருடம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்த முயன்றமைக்கான குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர் பேன் கிராஃப்ட் இற்கு ஒன்பது மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரது  அணியின் தலைமைப் பதவிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma