ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் மறுசீரமைப்புக்கள் செய்யப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அரச நிறுவனங்களில் சில மறுசீரமைப்புக்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. விமான சேவை நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஆரோக்கியமான வளர்ச்சி நிலை காணப்பட்டாலும் பொருளாதாரம் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சந்தையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.