ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு, இன்று(04) பிற்பகல் 3.00 மணிக்கு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதியினால் விஷேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.