ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு நிறைவு பொரலை கெம்பல் மைதானத்தில்..

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்நிகழ்வு அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள, நிலையில் நிகழ்வில் கலந்து கொள்ள அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 வது ஆண்டு நிறைவு நிகழ்வு பொரலை கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)