ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம் எஸ் தௌபீக் அவர்களது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

இறைவனுக்காக தியாகங்கள் செய்து இறையருளை பெற்றுக்கொள்வோம்.

இறைத்தூதர் இப்றாஹீம் நபியின் வாழ்வில் நடந்த தியாகத்தினை வரலாறு நெடுகிலும் நினைவு கூறப்படுகின்ற தினமாக இன்றைய தினம் காணப்படுகிறது. புனித ஈதுல் அழ்கா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் அன்புக்குரிய அனைத்து உறவுகளுக்கும் என் உளமார்ந்த தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பததில் மிக்க மகிழ்ச்சியடைவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

இறைத்தூதர் இப்றாஹீம் நபியின் துணிச்சல் மிக்க தியாகம்தான் சத்தியத்தை இவ்வுலகில் நிலைக்கச் செய்துள்ளது. அவர்களிடமிருந்து கற்ற அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமை மற்றும் சத்தியத்துடன் எமது சமூகம் இயங்கவேண்டும்.

இறைதூதர் இப்றாஹீம் நபியின் அளப்பெரிய தியாகங்களை நினைவு கூறுவதற்காக கட்டமைக்கப்பட்ட இஸ்லாத்தின் இறுதி கடமையான ஹஜ் பல படிப்பினைகளை கொண்ட ஒரு அமலாகும், எம்மால் முடியுமானவர்கள் ஹஜ் மற்றும் உழ்ஹிய்யா போன்றவற்றினை நிறைவேற்றி இறையருளை பெற்றுக்கொள்வோம்.

இந்நன்னாளில் உலகளாவிய ரீதியில், குறிப்பாக எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளும் சோதனைகளும் நீங்கி எல்லா இன மக்களும் ஆரோக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழவும் வருங்காலம் இருள் நீங்கி ஒளிமயமாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன். இதயத்தின் ஆழத்திலிருந்து இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு