ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் கலந்துரையாடல் ஒன்று இன்று(20) மாலை நடைபெறவுள்ளது.
இன்று மாலை 7.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவிருக்கும் இந்தக் கலந்துரையாடலில் அனைத்து மாகாண சபைகளிலும் உள்ள சுதந்திரக் கட்சி பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி மூலமாக உரியவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளல், எதிர்வரும் மேதினக் கூட்டம் தொடர்பான விடயங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.