ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் 64வது மாநாடு – இன்னாள் ஜனாதிபதியின் தலைமையில்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது மாநாட்டு நிகழ்வுகள் இன்று(02) பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவிருக்கும் கட்சியின் 64 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்விற்கு சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு பிரித் வழிபாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் ஏனைய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வை முன்னிட்டு இம்மாதம் முதல் வாரம் முழுவதும் நாட்டில் உள்ள சகல முக்கிய மதஸ்தலங்களிலும் கட்சியின் நலன் கருதி மத வழிபாடுகள் நடத்தப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

(riz)