ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பரில் அறிவிக்கப்படும்

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கட்சி சம்மேளனத்தில் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் தற்போது இடம்பெறுகின்ற விஷேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.