ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்மீது நடாத்தப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணைகளுக்கு அஞ்சப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தாலும் எந்தவொரு ஒழுக்காற்று விசாரணைகளுக்கும் அஞ்சப் போவதில்லை.
எவ்வாறான தடைகள் போடப்பட்டாலும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பதனை தடுக்க முடியாது.
கண்டியில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
எனினும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.
வெளிநாடு சென்றுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் குறித்த இந்த மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.