ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை மீண்டும் பொறுப்பேற்பதில்லை என்றும் தான் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உடன் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தனக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரையும் சந்தித்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிவினை நோக்கி செல்லாது கட்டியெழுப்புவது கட்சியின் தலைவரது பொறுப்பு எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
“நான் ஸ்ரீ.சு.கட்சி ஒருவன், அதன் கொள்கைகளை பாதுகாத்து நாட்டினை அபிவிருத்தி செய்தேன். ஆனால், இப்போது அனைத்தினையும் மறந்து இந்நாள் தலைவர், தான் ஸ்ரீ.சு.கட்சியினை அழித்து. நாட்டின் அபிவிருத்திகளில் மோசடி செய்து களவாடியதாக சேறு பூச முயற்சிக்கிறார். இன்னும் குறித்த முயற்சியினை கைவிடவில்லை. நாம் இன்னும் சுதந்திரக் கட்சியுடனே இருக்கின்றோம். சுதந்திரக் கட்சியினை பாதுகாக்க ஒழுங்கான வேலைத் திட்டமொன்றினை நிறுவ நாமும் விருப்பம். அதற்கான ஒத்துழைப்பினையும் வழங்கத் தயார்..” என தெரிவித்துள்ளார்.