ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(06) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கின்ற சுதந்திர கட்சியின், தயாசிறி ஜெயசேகர, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, சுசில் பிரேமஜெயந்த போன்றவர்கள், பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

#####