ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் அமைச்சர் பொறுப்புகளில் மிக விரைவில் மாற்றம் ஏற்படும் என்று அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் நேர்காணலில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் துமிந்த திசாநாயக்க,
சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாகாண சபைகளின் அமைச்சுப் பதவிகள் ஒரு சில நாட்களுக்குள் மாற்றம் செய்யப்படும்.
ஜனாதிபதியின் அரசியல் செயற்திட்டங்களுக்கு உதவாத, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கும் நபர்கள் இதன் போது அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.
அத்துடன் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக செயற்படாதவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.