எதிர்வரும் 04ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாநாட்டை நடத்தும் இடம் மற்றும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள தமக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இது குறித்து கேட்டபோது, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.