ஸ்ரீ.சு.கட்சியின் தலைமையகத்தில் உள்ள ஊழியர்களுக்கு விடுமுறை…

கொழும்பு – டாலி வீதியில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சித் தலைமையகத்தினை மூடிவைக்க காரணம் அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாலேயே ஆகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

தாய்லாந்து சுற்றுப் பயணத்தில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளவும் நாடு திரும்பும் வரையில் கட்சித் தலைமையகம் மூடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் செய்தி விட்டிருந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சித் தலைமையகம்