ஸ்ரீ.சு.கட்சியின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து (upadte)

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி அலுவலகத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கு தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக வௌியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என, ஜனாதிபதி, ஊடக பிரதானிகள் முன்னிலையில் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே நாட்டில் அரசியல் உறுதியற்ற தன்மை இடம்பெற்று வருவதனை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு 19ம் அரசியலமைப்பு திருத்தமே காரணம் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 02 மாதங்களில் பொதுத் தேர்தல் நடாத்தப்படும் எனவும், நாட்டிற்கு சாபமான 19ம் திருத்தமானது NGO இனது தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

நான்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் தாம் கையொப்பமிட்டுள்ளதாகவும், தினமும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டிருந்தார்.