அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் இன்று(03) ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரை சந்தித்து நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கட்சியின் நிலைப்பாட்டினை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், பிரதமர் குறித்த பதவியில் இருந்து விலக மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Rishma